பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக, ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தினால் 33 மில்லியன் ரூபா செலவு செய்து கூரைதகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட போது அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான எதிராளிகளுக்கு இன்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட இருந்தது.

இந்த நிலையில், எதிராளி ஒருவர் மன்றில் முன்னிலையாகாத நிலையில், குற்றப்பத்திரிகை கையளிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

Comments