ஒரு குடும்பமே உண்ணவிரதம் இருக்கும் அவலம்!

தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் 1983ஆம் ஆண்டுமுதல் வாழ்ந்து வருவதாகவும், தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணி பிணக்கு 7 வருடமாக காணப்படுவதாக தெரிவிக்கம் குறித்த குடும்பத்தினர், இன்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணி விடயம் தொடர்பில் தமக்கெதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த காணிக்கான காணி உரிமத்தினை எதிர் தர்பினருக்கு வழங்கலாம் என மாகாண காணி ஆணையாளர் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமக்குரிய நீதி கிடைக்கும் வரையில் தாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அரசியல்வாதிகளும் வருகை தரும் பட்சத்தில்லேயே தமது போராட்டம் கைவிடப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம் தெரிவிக்கின்றது.

Comments