இரண்டு பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பு – கல்முனைக்கான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டு இருந்தது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு பேருந்துக்களும் சிறு சேதத்துக்குள்ளாகிய போதிலும், இச்சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்து, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இரண்டு பேருந்துக்களில் ஒன்று மஞ்சந்தொடுவாய் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்குச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த பேருந்து மோதியதால் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Post a Comment