பொலிஸ் மா அதிபரின் காக்கிச் சட்டையின் பச்சை நிறம் வெளிப்பட்டது - விமல்
பொலிஸ் மா அதிபரின் காக்கிச் சட்டையில் உள்ள பச்சை நிறம் (ஐ.தே.க) பாதயாத்திரையின் போது தெளிவாக வெளிப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் எமது பாதயாத்திரையின் வெற்றியை யார் மறைக்க நினைத்தாலும் அது தற்போது மக்களிடத்தில் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
என். எம் பெரேரா மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டு எதிரணியின் சார்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது சில ஊடகங்கள் இந்த போராட்டம் வெற்றிபெறவில்லை என்றும் மிகக்குறைந்தளவிலாக மக்கள் தொகையினரே பாதயாத்திரையில் கலந்துக்கொண்டனர் என்றும் வெளிக்காட்ட முனைகின்றனர். ஆனால் அரசாங்கத்தின் தடைகளுக்கு மத்தியிலும் நாம் பெரும் வெற்றியடைந்துள்ளோம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.
இவ்வாறு கூறிக்கொள்ளும் அரசாங்கத்தரப்பினர் 20 வருடத்திற்கும் மேலாக எதிர்கட்சியாக இருந்த போது நாம் திரட்டிய மக்கள் தொகையில் காற்பங்கினரையாவது ஒன்றுத்திரட்ட முடிந்ததா என்பதை யோதித்து பார்க்க வேண்டும். அத்தோடு குறித்த பாதயாத்திரையில் பல்வேறு மனிதாபிமான குணங்கள் மக்களிடத்தில் வெளிப்பட்டது. மக்கள் எமது நோக்கங்களை நன்கு உணர்ந்துக்கொண்டுள்ளனர்.
அத்தோடு எமது பாதயாத்திரை முடிவின்போது பொலிஸ் அதிகாரிகளின் சூட்சுமமான பல விடங்களும் வெளிப்பட்டன. குறிப்பாக பொலிஸ்மா அதிபரின் பச்சை உடை நன்கு வெளிப்பட்டது. பல்வேறு நிறத்திலான யானைக்குட்டிகளும் எம்மை பார்த்து விமர்சிக்கின்றன. ஆனால் நாம் யார் என்பதற்கு இந்த பாதயாத்திரை தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கும் என நம்புகின்றேன்.

Comments
Post a Comment