முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் எங்கள் கடமை - மாவை சேனாதிராஜா
.யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அமர்வு, 27 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின்
ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த அமர்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி திரு. மைக்கல் தாசன், யாழ் நகர அபிவிருத்தி திட்டமிடல் தொடர்பான விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார். அடுத்து, மீள்குடியேற்றம் தொடர்பிலான அரசாங்க நடைமுறை குறித்த விளக்கம், யாழ் உதவி அரசாங்க அதிபர் திரு. முரளிதரன் அவர்களால் வளங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகள், மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் குறித்து தெரிவித்தார்கள், அவர்கள் தெரிவித்த விடயங்கள் அவ்விடத்திலேயே ஒரு ஆவணமாக தொகுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர் கெளரவ சீ.வீ.கே. சிவஞானம், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ விஜயகலா மகேஸ்வரனின் பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
டாக்டர் ஹிஜாஸ் அவர்கள் சிவில் சமூகம் சார்பான கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். கெளரவ மாவை சேனாதிராஜா அவர்கள் தனது உரையில் "யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் எங்களது பொறுப்பாகும், அதனை சாத்தியமான முறையில் நடைமுறைப் படுத்துவதற்கு எங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம். வடமாகாணசபையோடும், மீள்குடியேற்ற அமைச்சோடும், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான மீள்குடியேற்ற செயலணியோடும் இணைந்து பணியாற்றுவோம்." என்று குறிப்பிட்டார்.
யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனியான பாராளுமன்றப் பிரதிநிதியொருவர் இல்லை என்று குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை, தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் நலனில் அக்கறை செலுத்துவார்கள் என்று கெளரவ மாவை சேனாதிராஜா அவர்கள் அங்கே உறுதியளித்தார்.
இவ்வமர்வு குறித்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் கெளரவ அய்யூப்அஸ்மின் அவர்கள், இது ஒரு வெற்றிகரமான அமர்வு என்றும், இதன் பலாபலன்களை யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் மிக விரைவில் கண்டுகொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments
Post a Comment