மஹிந்தவின் ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளி வரும்!

மஹிந்தவின் ரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தனித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பாரோ அப்போது வெளிப்படுத்துவோம்  என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ரகசியங்கள் நிதி மோசடிகள் அல்லது ஊழல் மோசடிகள் என்று அர்த்தம் அல்ல. அதையும் தாண்டிய பல்வேறு விடயங்கள் உள்ளன. அரசியல் ரகசியங்கள் பல உள்ளன.

அவற்றில் ஒன்றாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளிப்படுத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.

மஹிந்த தொடர்பில் உள்ள ரகசியங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments