மகிந்தவின் பாதை யாத்திரை சொல்லுகின்ற செய்தி !

அஹமட் புர்க்கான் JP
ஊடகப்பேச்சாளர்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி

இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில் நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவ நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியதில் குற்றம் ஏதும் இல்லை அது காலத்தின் தேவை, கட்டாயம் என்றாலும் நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கு அதன் மூலம் ஒருவிடயத்தை நாம் கற்றுக்கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் கூறுவது போல் சிறுபான்மையர் சமூகம் நினைத்தால் அரசாங்கத்தை மாற்ற முடியும் என்பதல்ல அது பெரும்பான்மை சமூகம் இணைந்தால் கூட்டாட்சி செய்ய முடியும் என்ற செய்தியை தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய அடுத்த கணமே சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே இனி அவர்கள் ஆட்சியமைக்க எங்கள் உதவி தேவைப்படாது

இன்று இரு பிரதான தேசிய கட்சிகள் இணைந்து அதாவது நடாத்தும் இந்த தேசிய அரசாங்கம் இதுவரை காலமும் ஆளும் கட்சியாகவும் எதிர் கட்சியாகவும் இருவேறு கொள்கைகளுடன் இருந்தவர்கள் எதிர்த்துக் கொண்டவர்கள் இன்று இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கமாக ஆட்சி செய்கின்ற பொழுது சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிங்களின் பேரம் பேசும் சக்தி செல்லாக் காசாகிப் போனதுதான் உண்மை.

மட்டுமல்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாப்பையும் விட அது சிறுபான்மை சமூகமான எங்களுக்கே அதிக பாதுகாப்பாக இருந்து வந்தது என்பதை சிந்திக்க தெரிந்த புத்தியுள்ளவர்கள் மறுப்பதற்கில்லை. என்றாலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறையில் சற்று தளர்ச்சியை ஏற்படுத்தி சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டதன் விளைவானது இன்று எங்களுக்கு புரியா விட்டாலும் இன்னும் ஒரு தசாப்த காலத்திற்கு பிற்பாடு அது எவ்வளவு பேராபத்தான ஒரு முடிவு என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வர்.

இன்று மகிந்த பாதை யாத்திரை செல்வதை நாங்கள் கிண்டல், கேழி செய்கிறோம் எதற்காக அவர் செத்த பாம்பாகி விட்டார் என்பதற்காக அவரை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என்பதற்காக ஆனால் நாங்கள் ஒருவிடயத்தை மரணிக்கும் வரை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் நாங்கள் இலங்கை நாட்டில் சிறுபான்மை சமூகம் என்பதையும் பெரும்பான்மை சிங்களர்களின் ஆதிக்கத்திற்கு கீழ்த்தான் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஆட்சிக்குள்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்பதை.

ஐ.தே.க யும் சுதந்திர கட்சியும் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்கும் மகிந்த தனிமையாக நின்று போட்டியிட்டும் மைத்திரி பாலஸ்ரீசேன எத்தனை இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெற்றார் என்பதையும் மகிந்த ராஜபக்ஷ எத்தனை இலட்சம் வாக்குகளால் தோட்கடிக்ப்பட்டார் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மகிந்தவிற்கு சிங்கள மக்களுடைய ஆதரவு இன்றும் எந்தளவு இருக்கிறது, என்பதையும் இனிவரும் காலங்களில் அரசியல் திருத்தங்கள் மூலமாகவோ அல்லது வேறுசில வழிகளிலோ இலங்கை பிரதமர் ஆட்சிமுறை கொண்டு வரப்பட்டால் அந்தப் பிரதமர் பதவிக்கு தப்பித்தவரியேனும் மகிந்த வந்தால் நமது நமது சமூகத்தின் கதை என்னவாகும் என்பதையும் அறிந்து நாம் கொஞ்சம் அடக்கி வாசிப்பது சிறந்தது.

 

Comments