கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கடத்தல்?
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று அதிகாலை குறித்த கோடீஸ்வர் வர்த்தகர் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த வர்த்தகரே நேற்று அதிகாலை வீடு திரும்பிய போது கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை வீட்டின் கதைவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவை மனைவி திறந்த போதிலும் வர்த்தகரைக் காணவில்லை எனவும், அவரது கார் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், சுமார் 150 யார் தொலைவில் வர்த்தகரின் விலையுயர்ந்த கைக்கடிகாரமும் இரத்தக்கறையும் காணப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது.
பிரபல ஆடைத்துறை இறக்குமதியாளரான சுமீம் சுலைமான் என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றார்.
வர்த்தக ரீதியில் தன்னிடம் கடன் பெற்ற பலர் அதனைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக அண்மையில் இவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்தும் வேறு கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment