சட்ட விரோத கட்டிடமாம்: பாத்தியா பள்ளிவாசல் அகற்றப்படப் போகின்றது!
தெஹிவளை பாத்யா மாவத்தையிலுள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவ்வாறு விஸ்தரிப்பு வேலைகள் தொடர்ந்தால் சட்டவிரோத நிர்மாணங்கள் அகற்றப்படுமெனவும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார்.
தெஹிவளை பாத்யா மாவத்தை, பள்ளிவாசல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;பள்ளிவாசல் நிர்மாணம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துவருவதால் இது தொடர்பாக கொஹுவளை பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
தெஹிவளை கல்கிசை மாநகர சபை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்காக வழங்கியுள்ள KBP/ 143/ 2015 ஆம் இலக்க அனுமதிப்பத்திரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை இரத்துச் செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிவாசல் தொடர்ந்தும் நிர்மாணிக்கப்பட்டால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவினைப் பெற்று சட்டவிரோத விஸ்தரிப்புகள் அகற்றப்படும்.
வீடொன்றுக்குள் முஸ்லிம் பள்ளிவாசல் இயங்கி வருவதாக கிடைத்த தகவல்களுக்கமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்தை பரிசோதனை செய்த பின்பே தெஹிவளை கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது என்றார் தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளர் தம்மிக முத்துகல.(விடிவெள்ளி)

Comments
Post a Comment