பேஸ்புக்கின் வருமானம் இவ்வளவா?

தற்போது உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இதன் பிரகாரம், 2016ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டுப் பகுதிக்கான வருமானத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 6.44 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வருமானமானது, 2015ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் ஈட்டப்பட்ட வருமானத்திலும் பார்க்க 59 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மொபைல் சாதனங்கள் ஊடாகவே அதிக பயனர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாகவும் இந்த எண்ணிக்கையானது 2015ஆம் ஆண்டை விட 76 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments