.சுதந்திர கட்சியின் மாநாட்டின் பிரதம அதிதியாக ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு முக்கிய விருந்தாளியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டிற்கு முக்கிய விருந்தாளியாக பிரதமர் அழைக்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

எப்படியிருந்தாலும், ஸ்ரீ ல.சு.க.யின் மாநாட்டுக்கு வருகை தரவிருப்பவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தான்.

இதனால் பிரதமர் செல்வதுதான் மிகவும் பொருத்தமானது என தூய ஹெல உறுமயவின் தலைவரும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில கூறினார்.

Comments