திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார் ஜனாதிபதி!

நேற்று இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

விமானம் மூலம் பெங்களூருக்கு சென்ற ஜனாதிபதி, பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலைக்கு சென்றுள்ளார்.

ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் ஜனாதிபதிக்கு வரவேற்பளித்துள்ளனர்.

இதைததொடர்ந்து, இன்று அதிகாலை 2.15 மணிக்கு கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி, அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் வருகையின் காரணமாக, திருப்பதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments