குச்சவெளியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் ரீதியில் கையினால் தடவிய ஒருவர் விளக்கமறியலில்


திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு பாலியல் ரீதியில் கையில் தடவிய நபர் ஒருவரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று செவ்வாய்கிழமை (30) உத்தரவிட்டார்.

ஜாயா நகர்,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குச்சவெளி கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணை அருகில் சென்று பாலியல் ரீதியில் கையினால் தடவியதாக குறித்த பெண்ணிணால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய திங்கட்கிழமை(29)பகல் கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை(30) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments