மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஹாஜியார் எதிர்வரும் வாரம் நியமனம்..!!

முன்னாள் கொழும்பு மாநகர மேயர் எம் ஜே எம் முஸ்ஸமில்  அவர்கள் மலேசிய நாட்டுக்கான இலங்கை தூதுவராக மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொழும்பு மாநகர சபையின் கால எல்லை முடிவுற்றுள்ள  நிலையில்த் வரும் வருடம் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலே மலேசியாவுக்கான இலங்கை தூதுவராக வரும் வாரங்களில் முஸம்மில் ஹாஜியார் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் கொழும்பு மாநகர முதல்வராக போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி வாய்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Comments