பெண்களே எச்சரிக்கை! இருதய நோய் பாதிப்பு அதிகரிப்பு!
தேசிய இருதய இன்ஸ்டிடியூட் கடந்த 5 ஆண்டுகளில் (2012-2016) இருதய நோய் தாக்குவது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் இருதய நோய் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளால் பெண்கள் பாதிக்கப்படுவது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இதேபோன்று 40 வயதுக்குள் பெண்களை இருதய நோய் தாக்குவது 28 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பைபாஸ் அறுவை சிகிச்சையில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது.
முன்பெல்லாம் மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போகிற ‘மெனோபாஸ்’ பருவத்துக்கு பிறகுதான் பெண்களை இருதய நோய் தாக்குவதாக கூறப்பட்டு வந்தது.
இப்போது ‘மெனோபாஸ்’ பருவத்துக்கு முன்பே பெண்கள் இருதய நோயால் தாக்கப்படுவது அம்பலத்துக்கு வந்துள்ளது.
பழங்கள், காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டும், 20-30 நிமிடங்கள் தினமும் உடல் பயிற்சியில் ஈடுபட்டும், இருதயத்தின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க முடியும் என்று புள்ளி விவரங்களை வெளியிட்ட தேசிய இருதய இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஓ.பி. யாதவ் தெரிவித்தார்.

Comments
Post a Comment