யுவதியை கடத்திய யுவதி பிரதேசவாசிகளால் மடக்கிப் பிடிப்பு... இலங்கையில் இந்த அவலம்
ஹெட்டிபொல பிரதேசத்தில் 20 மற்றும் 15 வயதான இரு யுவதிகளிடையே ஏற்பட்ட அபரிமிதமான காதலின் விளைவாக இருபது வயதான யுவதி மற்றைய யுவதியை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் செல்ல முயற்சித்த போது யுவதி உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு யுவதிகள் இருவரும் உறவினர்கள் எனவும் இருவரிடையே மிக நீண்ட நாட்களாக நிலவி வந்த காதலையடுத்து, வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான யுவதி தனது நண்பி ஒருவருடன் இணைந்து முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி, பலவந்தமாக மேற்படி 15 வயதான யுவதியைக் கடத்தி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட 20 வயதான யுவதி ஆண்கள் போன்று தலைமுடியை அலங்காரப்படுத்திக் கொண்டு, ஆண்கள் அணியும் உடைகளை அணிந்து எப்போது ஆண் ஒருவரை போன்றே தோற்றமளித்துள்ளதுடன் சிகரெட் மற்றும் மதுபானங்களையும் உபயோகித்து வந்துள்ளார்.
ஹெட்டிபொலவில் வசிக்கும் தனது உறவினரான 15 வயதான சிறுமியின் வீட்டுக்கு சென்ற இந்த யுவதி சிறிது காலம் அங்கு தங்கியிருந்த போது இருவருக்குமிடையே ஒரு வகையான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் வென்னப்புவயை சேர்ந்த (20 ) யுவதியின் நடத்தையை விரும்பாத சிறுமியின் வீட்டார் அவரை அங்கிருந்து அனுப்பியதோடு, மறுபடியும் .இங்கே வரவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு வீடு சென்ற யுவதி, 18 வயதான நண்பி ஒருவரை அழைத்துக் கொண்டு தனக்கு தெரிந்த முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெட்டிபொலவுக்கு சென்று தனது காதலியான 15 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துவர முயற்சித்துள்ளார்.
அதன்போதே குறித்த யுவதியும் அவருக்கு ஆதரவளித்த நண்பியும் முச்சக்கரவண்டி சாரதியும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த இரு யுவதிகளின் வீடுகளில் இருந்தும் ஒருவருக்கொருவர் பரிமாற்றிக் கொண்ட பல காதல் கடிதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை ஹெட்டிபொல நீதிவான் மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment