நல்லாட்சியில் அரசின் தவறும் மக்களின் தவறும் – ஒரு சுருக்கமான பார்வை

கடந்த அரசின் ஊழல் மோசடிகளை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்து நல்லாட்சி என்ற பெயரில் உருவான புதிய அரசானது தங்கள் ஆட்சி தொடக்கம் இன்றுவரை பாரிய உள்நாட்டு , வெளிநாட்டு சவால்களை எதிர்கொண்டுள்ளது .
பழைய கட்டிடத்தை இடித்து சுத்தம் செய்து புதிய வீடு கட்டுவது என்பது புதிதாக வீடு கட்டுவதைவிட சற்று கடினமானது என்ற உண்மை நம் எல்லோருக்கும் தெரிந்தவிடயம் . அரசியல் சவால்கள் இதைவிட கடினமான விடயம்.
பாரிய கடன்சுமைகள், பொருளாதார நெருக்கடி, ஸ்திரநிலையற்ற அரசாங்கம் , கூட்டு எதிர்கட்சிகளின் முட்டுக்கட்டைகள், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை, இவ்வாறான மனோ நிலைக்குள் அகப்பட்ட குறுகிய சிந்தனைகொண்ட அரசியல் அறிவற்ற மக்கள் , உள்நாட்டுப்போர் முடிந்ததிலிருந்து உருவான வெளிநாட்டு சவால்கள், வல்லரசு நாடுகளின் ஆதிக்க போட்டி, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போன்ற இன்னும் பல சவால்களுக்கு மத்தியில் உருவாகி அரசு ஒன்று பயணம் செய்வது என்பது நடுநிசியில் வெளிச்சம் இல்லாமல் பெரும் காட்டை கடப்பதைவிட கடினமானது .
பொருளாதார ரீதியில் போதிய வசதியை பெறாதபோது ஒருமனிதனின் உள்ளத்தில் வேறு சிந்தனைகளை ஏற்படுத்துவது எம் போன்ற மனநிலைகள் கொண்ட நாடுகளில் சற்று கடினமானது. ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்து அமைச்சர்களின் செலவுகளையும் குறைத்தாலே ஓரளவு வாழ்க்கை செலவை குறைத்துவிடலாம். ஆனால் இதுவும் நடைமுறைக்கு தற்போது உடனே சாத்தியமில்லை . படிமுறை ஒழுங்கு என்பது இப்பிரபஞ்ச விதி .
அதன்படி திட்டமிட்டு காரியங்களை செய்ய சில விடயங்களுக்கு பல வருடங்கள் எடுக்கலாம் . அதுவரை மக்களும் நிலைமைகளை புரிந்து பொறுமையுடன் இருக்கவேண்டும் . அதேநேரம், அரசும் நல்ல திட்டமிடல்களை செய்தால் நாடு நல்ல முன்னேற்ற நிலைக்கு வரமுடியும் . ஆனால் இப்படிமுறை ஒழுங்கில் திட்டமிடும்போது அரசு மேற்சொன்ன இன்னும்பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிவரும் .
பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதிலேயே ஒரு அரசு அதிக அக்கறை செலுத்தவேண்டும் . பாதுகாப்புக்கு அடுத்ததாக மக்களின் திருப்தி அதிலேயே தங்கியிருக்கிறது . ஊழல் மோசடிகள் செய்தவர்களை தண்டிப்பதில் அரசு இப்படிமுறை ஒழுங்கில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது .
மோசடிக்காரர்களை அரசு தண்டிக்கவில்லை என்று சில அரசியல்கட்சிகள் , மக்கள் கூட அதிருப்தி நிலையில் இருகின்றார்கள். ஆனால் அரசு அதனை உடனே முழுமையாக செய்யாமல் படிமுறை ஒழுங்கில் அவற்றை நுணுக்கமாக செய்வதாகவே தெறிகிறது. படிமுறை ஒழுங்குபற்றி மக்களும் அறிவூட்டப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள். மக்களிடையே இவ்வறிவை பரப்புவது அரசின் சவால்களுக்கு உறுதுணையாக இருக்கும் .
உயர் அரச உத்தியோகத்தர்கள் அனுபவித்து வந்த சலுகைகள் பலவற்றை இவ்வரசு உடனே நீக்கியது ஒரு பிழையான முன்னெடுப்பாக இருக்கிறது. உதாரணம் வாகன permit . பிழையான திட்டமிடலாக இருந்தாலும் சட்டரீதியாக சலுகைகளை அனுபவித்தவர்களை உடனே அதிலிருந்து மீட்க செய்வது என்பது நடைமுறை யதார்த்ததிற்கு பொருந்தாத ஒன்று. அவற்றையும் சற்று தாமதித்து நீக்கியிருக்கலாம்.
ஆனால் அரசு வாகன permit விடயத்தில் காலத்திற்கு ஏற்றால்போல் தற்போது நல்லமுறையில் திட்டமிட்டிருக்கிறது ஆனால் சற்று தாமதித்து அதனை அமுல்படுத்தியிருக்கலாம். இதுவும் படிமுறை ஒழுங்கை மீறும் அரசின் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது .
எது எப்படியோ அரசு மக்களின் வாழ்க்கை செலவை படிப்படியாக குறைத்து பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வகுத்து மக்களிடையே பொருளாதரத்தில் பாரிய ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வதற்குரிய வகையில் விரைவான திட்டமிடல்களை மேட்கொள்ளவேண்டும் .
அதேநேரம், மக்களும் அரசின் சவால்களை புரிந்துகொண்டு சில வருடங்கள் பொறுமைகாத்து அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டும். ஒருவருடத்திட்குள்ளே உள்நாட்டு ஆர்பாட்டங்கள் போன்ற முன்னெடுப்புகளை ஏற்படுத்தி அரசுக்கு நெருக்கடிகளை கொடுப்பது பற்றி மக்களும் சற்று சிந்திக்கவேண்டும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் அரசை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கும் .
முப்பது வருட இழப்புக்களை வெறும் ஒரு வருடத்தில் மாற்ற நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை புரிந்துகொண்டு அரசுக்கு ஐந்து அல்லது பத்து வருட கால அவகாசத்தை வழங்க மக்களும் முன்வரவேண்டும் என்பதே சிறந்த எதிர்காலத்துக்குரிய வெற்றிக்கான வழியாக இருக்கும் .

Comments
Post a Comment