இலங்கை தம்பதியர் இந்தியாவில் கைது!

போலி ஆவணங்களுடன் இந்திய கடவுச் சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கை தம்பதியர் இந்தியா திருப்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த குறித்த நபர்கள் 2011ம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தவர்கள் எனவும், பின்னர் இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கை செல்ல முயற்சித்த போதே குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தம்பதியருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments