முஸ்லீம்கள் என்பதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இன்னுமொரு சம்பவம் ...

முஸ்லீம்கள் என்பதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இன்னும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிக்கும்  ஃபைசல்(36) நாசியா அலி (34) தம்பதியர் தங்களின் 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்புவதற்காக டெல்டா விமான நிறுவன விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

அப்போது விமான பணிக்குழுவின் பெண் ஊழியர் ஒருவர் பைலட்டிடம் சென்று விமானத்தில் முஸ்லிம் பெண்மணி தலையைச் சுற்றி துணி அணிந்துள்ளாதாகவும்,அல்லாஹ் என்று அடிக்கடி கூறுவதாகவும் அந்த தம்பதியரை பார்க்கும் போது தமக்கு சவுகரியமாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து விமான நிலைய தரைக் குழுவினரை தொடர்பு கொண்டு முஸ்லிம் தம்பதியரை வெளியேற்றும் வரை விமானத்தை இயக்கப் போவதில்லை என விமானி கூறியுள்ளார்.

இதனையடுத்து  விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் இருந்த தம்பதியரை தங்களுடன் வருமாறு அழைத்து சென்றுள்ளனர்.பின்னர் இச்சம்பவம் பற்றி அறிந்த முஸ்லிம் வழக்கறிஞர் குழு, மதப் பாகுபாடு காரணமாக விமானத்தில் இருந்து தம்பதியரை இறக்கி விட்டதாகக் கூறி டெல்டா விமான நிறுவனம் மீது அமெரிக்க சிவில் போக்குவரத்து துறையிடம் புகார் அளித்துள்ளது.

இது குறித்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறுகையில் அனைத்து பயணிகளையும்  மரியாதையோடு கவனிப்பதாகவும், மதம், நிறம், இனம் என எவ்வகையிலும் பாகுபாடுயின்றி கவனிப்பதாகவும் கூறியுள்ளது.  மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments