தெற்கு கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும்!

எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் தெற்கு கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்னது.

மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலியில் இருந்து அம்பாந்தோடையினூடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் இந்த காற்று ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments