முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரனயுடன் சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு(பெடோ)வும் இளம்தளிர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இனைந்து குச்சவெளி இறக்கக்கண்டி யில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வை இன்று(20)வெள்ளிக்கிழமை அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் நடாத்தியது.

பெடோவின் தலைவர் எம்.பி.நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இன்னிகழ்வில் குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி செனவிரத்ன முஸ்லிமெய்ட் திட்டமிடல் பணிப்பாளர் அப்துல்சலீம் பிராந்திய இணைப்பாளர் மஹ்ரூப் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் நிஜாம்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்

பயனாளிகள் 11பேர் நஞ்சற்ற உணவு நாட்டுக் கோழி வளர்த்தள் மீன்பிடி வள்ளம் ஜுகிதையல்மிசின் இடியப்ப உபகரணம் ஆயுள்வேதவைத்தியகிளினிக் தையலுக்குரிய உபகரணம் சைக்கிள் ஆகிய உதவிகள் இந்நிகழ்வில் வாழ்வாதார உதவிகளாக பெற்றுக்கொண்டனர்.

பெடொநிறுவனத்தின் இணையத்தளம் www.pedonews.comஉத்தியொகபூர்வமாக குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியால் ஆர்ம்பித்து வைக்கப்பட்டது

Comments