ஜனாதிபதி அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்!
ஜனாதிபதி அனைவருக்கும் ஒரு சிறப்பான முன்னுதாரணமாக விளங்குவதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகமொன்றினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு முகம்கொடுக்க தயார் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2009ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றிய போது, நீர்த்தேக்க அணையொன்றை கட்டுவதற்கான திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு இலஞ்சம் கோரப்பட்டதாகவும், அது தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த குற்ச்சாட்டை ஜனாதிபதி மறுத்திருந்த அதேவேளை, முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவதூறு செய்தி வெளியிட்ட அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment