இலங்கையில் இஸ்ரேலுடைய ஊடுருவல் முஸ்லிங்களுக்கு பாதகம்
அதை தொடர்ந்து 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்திரிக்கா அரசாங்கத்தில் மீண்டும் இரு நாட்டிற்குமான உறவு துளிர் விட ஆரம்பித்தது. அதன் விளைவாக இலங்கை - இஸ்ரேலுக்கிைடயிலான இராஜதந்திர உறவுகள் 2000 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டதுடன்
2013 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் அமைப்பதற்குரிய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இது இவ்வாறு இன்று இருக்க நல்லாட்சி அரசாங்கத்தினுடான உறவை இஸ்ரேல் பலப்படுத்தி வருகின்றது அதன் ஒரு கட்டமாக கடந்த வருட செப்டெம்பர் மாத இறுதியில் உலக முன்னணி யூத நிறுவனமாக கருதப்படும் அமெரிக்க யூத கவுன்சிலின் தூதுக் குழுவினர் இலங்கைக்கு வந்து நல்லாட்சி அரசின் முக்கிய சில அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தொரிவித்ததுடன் அமெரிக்க யூத கவுன்சிளின் உறவு நமது அமைப்பின் பிரதிநிதிகள் மூலமாக நெருக்கமாக தொடரும் என்றும் பேசப்பட்டது. அன்று இந்த யூத கவுன்சிலின் தூதுக் குழுவினரின் வருகையானது நாட்டு முஸ்லிம்களிடத்திலே பெரும் அச்சத்தையும் இந்த நல்லாட்சி அரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தையும் கேள்விக்குரியக்கியதுடன் யூத கவுன்சிளின் விஜயம் சம்மந்தமாக இஸ்ரேல் எதிர்ப்பு சிந்தனையாளர்களாளும் ஏனையவர்களாலும் எதிர்ப்புகளும் அறிக்கைகளும் வெளியிடப்பட்ட நேரத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இலங்கை – இஸ்ரேல் யூத சியோனிஸ்ட்களுடனும் நட்புறவை வளர்த்து வருவதாக சுமத்துப்பட்டுவரும் குற்றசாட்டுகளில் எந்த உண்மை இல்லையொன்றும் அமெரிக்க யூத சங்கத்தினர் இலங்கைக்கு விஜயம் அது ஒரு இராஜதந்திர விஜயமில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்ததுடன் .இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருப்பவர்களும் சில பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றும் அறிக்கை விட்டார்.
இந்த முஜிபுர் ரஹ்மான் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் அமைப்பதற்குரிய முனைப்புகளில் மஹிந்த அரசு முயற்சிகளை மேற்கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அன்று மாகாண சபை உறுப்பினராக இருந்த போது சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் சிவில் அமைப்புகளும் அதற்கு எதிராக கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை செய்து எதிர்பபை வெளியிட்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே கடந்த வருட இறுதியில் நடைபெற்ற யூத கவுன்சிலின் ஒப்பந்தப்படி இஸ்ரேல் –இலங்கை அரசுக்கான உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருப்பதையும் அன்று மறுத்த நல்லாட்சி அரசு இன்று இஸ்ரேலின் உறவை ஒப்புக்கொண்டிருப்பதையும் நாம் காணலாம். முஸ்லிம் சமூகத்தை எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்ட யூதசமூகத்தின் வரவானது நமது நாட்டு முஸ்லிம்களை பொறுத்தவரை பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்று அரசு கூறினாலும் நேரடியாக எந்த பாதிப்புக்களை ஏற்படுத்தா விட்டாலும் மறைமுகமாக பாதிப்புக்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நாம்
கண்ட வரலாற்று உண்மையாகும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு
பெரும் பங்காற்றியுள்ள நமது சமூகம் இன்று இஸ்ரேலுடன் இலங்கை அரசு மீண்டும் உறவை வலுப்படுத்துகின்றமையானது முஸ்லிம்களையும் இஸ்ரேல் எதிர்ப்பு சிந்தனையாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் எமது மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட எமது பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற பதவிகளில் வகித்துக்கொண்டு தமது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதிள்ளே கவணமாக இருக்கின்றார்களே தவிர தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகளை பற்றி எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை. சமுகத்தின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பதவி பட்டம் தந்த அரசின் இருப்புத்தான் முக்கியம்.என்பது மட்டும் உண்மை.


Comments
Post a Comment