இலங்கை அரசாங்கமே எங்களுக்கு பொருப்புக் கூற வேண்டும் – மக்கள் சாட்சியம்

காணாமல் போண எங்களுடைய உறவுகளை மீட்க இலங்கை அரசாங்கமே எங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என இன்று(24) குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க கலந்தாலோசனைக்கான செயலணியின் முன் மக்கள் சாட்சியம் அளித்தனர்.

மேலும் அம்மக்கள் தெரிவிப்பதாவது காணாமல் போனோருக்கான அலுவலகத்தை தங்களது சொந்த பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துத்தருமாரும் அண்மையில் காணாமல் போனோர்களை தேடிப் பெற்றுத்தருமாரும் காலம் கடந்த உறவுளுக்கான நஷ்ட ஈட்டினையும் தருமாறும் மக்கள் ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தனர்.

இதில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை திரியாய் நிலாவெளி இறக்கக் கண்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார்150 க்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லீம் மக்கள் இதன் போது தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.


Comments