கந்தளாயில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியல்

.திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் அரைகிலோ கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க நேற்று வெள்ளிக்கிழமை(12) உத்தரவிட்டார்.

கந்தளாய், லைட்வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபரின் வீட்டினை சேதனை மேற்கொண்டபோதே அரை கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை வியாழக்கிழமை (11) இரவு கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை(12) பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments