ரயிலில் மோதி இளைஞர் பலி!

திருகோணமலையில் இருந்து கொழும்புபை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சிவஞான வடிவேல் அனோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments