பௌத்த பிரதேசங்களில் முஸ்லிம் பள்ளிவாசல் கட்டத்தந்த சிங்களவர்களோடு அன்பாய் இருங்கள்
இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்கள் பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களாகும், ஆனால் முஸ்லிம் செறிந்து குழுமி வாழும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் பௌத்த விகாரை அல்லது பௌத்த சிலைகளை வைப்பதை இனவாதமாக அல்லது வன்முறையாக பார்க்கின்ற பொழுதில் அதிகம் பௌத்தர்கள் வாழும் பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் அதிகமதிகம் காணப்படுகிறது.
உதாரணமாக மாத்தறை, காலி, அநுராதபுர, கண்டி போன்ற ஊர்களிலும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் ஆங்காங்கே வாழ்ந்தாலும் பள்ளாவசல்கள் செல்வச் செழிப்புடன் காட்சி தருகின்றது, பௌத்த விகாரைகளை விட சிறப்பாக இருக்கிறது, இது இன்று நேற்றல்ல மன்னராட்சி இலங்கையில் இருந்த பொழுதும் முஸ்லிம்களும் சிங்களவர்கள் அண்ணன் தம்பிபோல வாழ்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
மன்னர்களின் பாதுகாப்பு மற்றும் நிதிகளை பராமரிக்க ஆலோசனை வழங்க முஸ்லிம்களே அதிகம் இருந்தனர் இதனை சிங்களவர்களாலும் மறக்க முடியாது, அப்படியிருக்கையில் எப்படி முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்கள் கிளர்ந்தெளுகின்றனர் என்று பார்த்தால் இஸ்லாமியத்தை நாங்கள் மறந்து செயற்பட்ட பொழுதே ஒழுக்கம், மரியாதை, மற்றயவர்களுன் பழகுதல், விருந்தோம்பல், ஒற்றுமை என்பவற்றை அதிகமதிகம் கற்றுத்தந்த இந்த மார்க்கத்தினை நாங்கள் மறந்து வி்ட்டோம் அரசியலுக்காக பொய்களையும் வதந்திகளையும் பரப்பினோம் மற்றைய இனத்தவரை இழிவாக கருதினோம் அவர்களை மதிக்க மறந்தோம். இஸ்லாத்தை பரப்ப மறந்தோம் கற்பிக்க மறந்தோம் இப்படி அடுக்கடுக்காய் ஆயிரம் பிழைகளை வைத்துக்கொண்டு வெறும் வார்த்தைகளால் இனவாதம் பேசுவதை விட்டுவிட்டு நாம் நாமாக முஸ்லிமாக உண்மை முஸ்லிமாக இருக்க பழகுவோம்.
அண்ணல் நபியவர்கள் காட்டித்தந்த பாதையில் பயணிப்போம், இலங்கையில் ஒற்றுமையினை நிலைநிறுத்த பாடுபடுவோம் இதற்காய் நம்மை அர்ப்பணிப்போம்.
ஆசிரியர் – சிலோன் முஸ்லிம்

Comments
Post a Comment