மாகாண மட்டப் போட்டியில் சாதணை படைத்த இப்றாவுக்கு வரவேற்பு !

மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்த பெரியநீலாவணை அக்பர் வித்தியாலய மாணவி அப்துல் லத்தீப் இப்றாவுக்கு நாளை(06-08-2016)சனிக்கிழமை மாலை மாபெரும் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த வரவேற்பு விழா அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெறவுள்ளது.நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் விஷேட விருந்தினராக் கலந்து கொண்டு மாணவி இப்றாவை வரவேற்று வாழ்த்திப் பரிசளிக்கவுள்ளார்.

Comments