வடபகுதி முஸ்லிம்களையும் பான் கி மூன் சந்திக்க வேண்டும், வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் கோரிக்கை.
யுத்தத்திற்குப் பின்னர் இரண்டாவது சந்தர்ப்பமாக இலங்கை வரும் பான் கி மூன் அவர்கள் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினரை சந்திக்கவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படுதல் அவசியமாகும். நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகள் விடயத்திலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் குறித்தும், உண்மையைக் கண்டறிவதற்கான நிகழ்ச்சித்திட்டத்திலும் வடக்கு மாகாணத்தில் இருந்து 1990களிலே பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும்.
எனவே பான் கீ மூன் அவர்களுடனான வடக்கு முஸ்லிம் சிவில் சமூக சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுகுறித்த கோரிக்கைகள் முன்னதாகவே இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சாதகமான ஒரு பதில் அவர்களிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். என்று வடக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் பொதுச் செயலாளர் ஜனாபா ஜென்ஸிலா மஜீத் தெரிவித்தார்.
பான் கீ மூன் அவர்களின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போதே எம்மையும் அவர் சந்திக்கவேண்டும் என்பது எமது விருப்பமாகும், அதன்போது வடக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தவர்களின் எதிர்பார்ப்புகள் அடங்கிய ஆவணமொன்றினையும் நாம் அவரிடத்தில் கையளிக்கவிருக்கின்றோம் என்று அவர் எமக்குத் தெரிவித்தார்.
தகவல்; என்.எம்.அப்துல்லாஹ்

Comments
Post a Comment