கிண்ணியா பிரதேச மேய்ச்சல் தரை விடயங்களில் பாராபட்சம் காட்டப்படுகின்றது
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் தரை விடயங்களில் இன்னமும் பாராபட்சம் காட்டப்படுவதோடு இதற்கான நிரந்தரமான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை (29) மாலை 2.30மணியளவில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் மாகாண சபை உறுப்பினர் நஜிப் அப்துல் மஜித் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் வீதிகளின் நிலைகள் சீரான நிலையில் இல்லையென்பதையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தினார்.கிண்ணியா பகுதிக்கான மேய்ச்சல் தரை விவகாரங்காளில் இரு தரப்பினரும் அதாவது விவசாயிகளும் ,கால் நடை வளர்ப்பாளர்களும் இவ்விடயத்தினை ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்துவதன் மூலமே அதனை ஏற்படுத்த முடியும்.
மேலும் கிண்ணியா பிரதேசத்தில் சின்ன மகாமாறு வீதிகள் முறையில் செப்பனிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு ,அதிகாரிகளினால் அப்பகுதி சிறு வீதிகள் முடிக்கப்பட்டுள்ளதை அறிவித்ததையடுத்து வீதிகள் தொடர்பாக கடும் ஆட்சோபனைகளை முன்வைத்தார் அரசியல் வாதிகள் சொகுசுக் காரில் செல்வதற்கல்ல வீதிகள் மக்கள் அன்றாடம் பாவிப்பதற்கும், பிரதேச மக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதே அரசியல் வாதிகளின் பொறுப்பாகும் எனவும் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு கிண்ணியா காக்காமுனை வீதி 2.6கிலோ மிற்றர் வரை காபட் வீதியாகவும், ஆலங்கேணி மற்றும் கிண்ணியா வீதிகளும் தலா 2.4கிலோமீற்றர் வரை காபட் வீதியாக்குவதற்காக நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Comments
Post a Comment