மைத்திரியின் இணையத்தளம் மீது இரண்டாவது நாளாகவும் சைபர் தாக்குதல்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் இணையத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.


நேற்று மாலை அந்த இணையத்தளம் இரண்டாவது தடவையாக இணையத்தாக்குதலுக்கு உள்ளானதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்போது அட்டவணை மேம்படுத்தல் என்ற வசனம் அதில் குறிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்று முன்தினம் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டபோது அதில் மாணவர்கள் தொடர்பான கோரிக்கைகள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments