கடத்தப்பட்ட வர்த்தகரின் படம் வெளியிடப்பட்டுள்ளது...

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் வர்த்தகர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடத்தப்பட்டுள்ள வர்த்தகரின் படத்தை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்காக காவற்துறை மூன்று தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் 071 85 91 727, 071 85 91 735 ஆகிய இலக்கங்கள் மற்றும் பம்பலபிட்டிய காவற்துறையின் 071 85 91 580 என்ற தொலை பேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தகவல்கள் வழங்க முடியும் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments