நாளை மூதூர் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு
தேசிய கலந்தாலோசனை செயலனியால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மக்கள் சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை மூதூர் பிரதேசத்திலுள்ள திரி சீடி அலுவலக கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம் பெறவுள்ளதாக அவ்வமைப்பின் மாவட்ட குழுவினர் தெரிவித்தனர்.
அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம்-உண்மை.நீதி.மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு-விஷேட நீதிமன்றம்-மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகிள நான்கு பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் தங்களது ஆலோசனை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்,
அத்துடன் எதிர்வரும் 24ம் திகதி குச்சவௌி பிரதேச செயலகத்திலும்-26ம் திகதி வெறுகல் பிரதேச செயலகத்திலும்-28ம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment