இளம் கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு!

திருகோணமலை – சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்டுள்ளதாக திருகோணமலைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த  சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த சடத்தை மீட்டுள்ளதோடு, பெண்ணின் கணவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச்சம்பவத்தின் பின்னர் குறித்த பெண்ணின் கணவன் தலைமறைவாகி உள்ளார் என்றும், இவரைத் தேடும் பணி தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.

Comments