இலங்கை வாழ் சகல உலமாக்களுக்களுக்குமான முக்கிய அறிவித்தல் !
உலமாக்களே ! இது உங்களுக்கு தான்.
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட உலமாக்களுக்கான பரந்த அளவிலான ஒரு இணைய கருத்து கணிப்பீடு நடைபெற்று வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா ?
பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மதரஸாக்களில் கடமை புரிகின்ற ஃ புரிந்த உலமாக்கள் ஹு கப்பாள்களின் பிரச்சினைகளை (குறிப்பாக அவர்களது பொருளாதார பிரச்சினைகளை) இனம் காண பரவலானதொரு இணைய கருத்து கணிப்பீட்டை மேற்கொண்டு தகவல்களை திரட்டிஇ அதன் பெறுபேற்றை எமது தாய் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமும் அதனூடாக தேவைப்படும் ஏனைய வக்பு சபை மஸ்ஜித்கள் ஒன்றியம் முஸ்லீம் கலாச்சார அமைச்சு உள்ளிட்ட அமைப்புக்களிடமும் கொண்டு சென்று பிரச்சனைகளுக்கான ஒரு சிறந்த தீர்வை அடைந்து கொள்ளும் நோக்கில் சில தினங்களாக இத்திஹாதுல் உலமா என்ற பெயரில் இயங்கும் ஒரு வட்ஸ்அப் குழுமம் செயற்பட்டு வருவதை இலங்கையிலும் அனைத்துலகிலும் வசிக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சகல உலமாக்களுக்கும் அறியத் தருகின்றோம்.
குறித்த இரு துறைகளிலும் கடமை புரிந்த புரிந்து கொண்டிருக்கின்ற கண்ணியமான மூத்த உலமாக்கள் வளர்ந்து வரும் உலமாக்கள் மற்றும் ஹாகபிள்கள் உள்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையை சார்ந்த உலமாக்கள் என அனைவருக்குமாகவே இவ் இணைய கருத்து கணிப்பீடு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வட்ஸப் குழுமங்களுக்கூடாகவே குறித்த இணைய கருத்துக் கணிப்பீடு நடை பெற்று வருவதுடன் இதுவரை 1100 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதுடன் இலங்கையில் உலமாக்களால் கையாளப் படுகின்ற 55 இற்கும் மேற்பட்ட வட்ஸப் குழுமங்களுக்கு தினமும் வாக்களிப்பு சம்பந்தமான தெளிவுகளும்இ வாக்களிப்பின் முக்கியத்துவம் பற்றியும் பெறுபேறுகள் பற்றியும் இத்திஹாதுல் உலமா வட்ஸப் குழுமத்தினால் அறிவிக்கப் பட்டு வருகின்றன.
உலமாக்கள் என்ற அடைமொழியுடன் 50 இற்கும் மேற்பட்ட வட்ஸ்அப் குழுமங்கள் இலங்கையில் செயற்பட்டு வருவது போல் இத்திஹாதுல் உலமா என்பதும் ஒரு வட்ஸ்அப் குழுமத்திற்கு வைக்கப் பட்டிருக்கும் பெயர் தான் என்பதை சகலரும் தெளிவாக புரிந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இணைய பாவனை உள்ள உலமாக்கள் அறவே இணைய பாவனை அற்ற உலமாக்களுக்கள் ஹாபிள்கள் எவரையேனும் அறிந்திருந்தால் குறித்த கருத்துக் கணிப்பீட்டில் அவர்களையும் பங்கு கொள்ளச் செய்வதற்காக கணிப்பீட்டுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள இணைப்பை குறுஞ்செய்தி மூலம் SMS அனுப்பி ஆர்வமூட்டுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
வாக்களிப்பில் ஏதும் சிக்கல்களை சந்திக்கும் உலமாக்கள் வாக்களிக்கும் முறை சம்பந்தமாக தெளிவு படுத்தப் பட்டு உலமாக்களிற்கான அநேகமான வட்ஸப் குழுமங்களுக்கூடாக அனுப்ப பட்ட Text Messages, Voice Cuts, Video Clip ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவற்றை மிக கவனமாக படித்துஇ கேட்டு விளங்கிக் கொண்டால் மிக இலகுவாக வாக்களிக்கலாம் இன்ஷா அள்ளாஹ்.
ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களித்தவர்களது வாக்குகளும் வாக்களிக்க தகுதியற்ற சிலரால் அளிக்கப்பட்ட வாக்குகளும் நிராகரிக்கப் பட்டு வருகின்றன என்ற கவலையான செய்தியை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாக்களித்த அனைத்து உலமாக்களிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் உங்கள் ஒரு வாக்கு கூட நிச்சியம் எமது உலமா சமூகத்தின் விடிவில் பாரிய பங்களிப்பு செலுத்தக் கூடியதாக அமையும் இன்ஷா அல்லாஹ் என்பதை இதுவரை வாக்களிக்க அவகாசம் கிடைக்காத உலமாக்களிடம் அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
இது ஒரு பொதுத் தளம் என்பதை கருத்திற் கொண்டு கணிப்பீட்டிற்காக ஏற்படுத்தப் பட்டுள்ள இணைப்பை இங்கே இணைக்க வில்லை என்பதையும் இதுவரை குறித்த இணைப்பை பெற்றுக் கொள்ளாத உலமாக்கள் அவசரமாக கீழ் காணும் உலமாக்களில் எவர்களையாவது தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம். அத்தோடு வாக்களிக்க தகுதியற்ற சிலர் ஏதோ ஒரு வகையில் இணைப்பை பெற்றுஇ வாக்களிப்பிலும் ஈடு பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை இலகுவில் அடையாளம் கண்டு அவர்களது வாக்குகள் நிராகரிக்கப் பட்டு எச்சரிக்கப் பட்டிருப்பதுடன் குறித்த விடையத்தில் மிகவும் அவதானம் செலுத்தப் பட்டு வருகின்றது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு:
இத்திஹாதுல் உலமா வட்ஸ்அப் குழுமம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 👇
அஷ்-ஷேக் ஷகபீக் (பஹ்ஜி)
00447941042215
அஷ்-ஷேக் இர்ஷாத் மூமீன் (பைஸி)
0775222455
அஷ்-ஷேக் பஸ்லுர் ரஹ்மான் (உஸ்வி)
0718369790
அஷ்-ஷேக் நௌபல்(பஹ்மி)
0773727752
அஷ்-ஷேக் வஸீம் அக்ரம்(ஈமானி)
0771945151
அஷ்-ஷேக் இல்ஹாம்(ரஷாதி)
0775947902
அஷ்-ஷேக் பௌஸுல் அமீர் (முஅய்யிதி)
0767771980
அஷ்-ஷேக் நுஸ்ரத் அலி(பாரி)
0717191866
அஷ்-ஷேக் இர்பான்(பஹ்ஜி)
00971558057734
அஷ்-ஷேக் ஜிப்ரி(ஈமானி)
0711440005
அஷ்-ஷேக் றயீஸ்(ரவாஹி)
0771779009
அஷ்-ஷேக் ரமழான் மர்சூக்(ரஹ்மானி)
0767406919
அள்ளாஹ் இக் கன்னி முயற்சியை இஃலாஸுடன் ஏற்றுக் கொள்வதுடன் உலமாக்கள் அனைவரினதும் அபிலாஷைகளை கண்ணியமாக அடைந்து கொள்ளவும் சமூகத்திற்கான உலமாக்களின் தீன் பணிகள் மெளத்து வரை தொடரவும் அருள் புரிவானாக.


Comments
Post a Comment