நல்லிணக்க பாத யாத்திரை வவுனியாவை அடைந்தது!

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான இப்பாதயாத்திரை இன்று மாலை வவுனியாவை வந்தடைந்தது.

மனித உரிமை அமைப்பினால் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கிளிநொச்சி கரடிப்போக்கில் அமைந்துள்ள புத்த விகாரை மற்றும் கிளிநொச்சி கந்தசாமி கோவில் என்பவற்றில் வழிபாடுகளை முடித்தவாறு புறப்பட்ட பாதயாத்திரை மாலை 4.15 மணியனளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

அங்கு வவுனியா மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார மற்றும் உத்தியோகத்தர்கள் மனித உரிமை அமைப்பைச் சோந்த மாவட்ட பிரதிநிதிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் கண்டி வீதி வழியாக அனுராதபுரம் நோக்கி புறப்பட்டனர்.

அனுராதபுரம், புத்தாளம், நீர்கொழும்பு, காலி, மாத்தளை என சென்று எதிர்வரும் 7 ஆம் திகதி அம்பாந்தோட்டை சென்றடைந்து அங்கு இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

Comments