.பாலமுனையில் காட்டு யானைகள் அட்டகாசம்! ஒருவர் வைத்தியசாலையில்

.அம்பாரை மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை வயல் பிரதேசத்தில் நேற்றிரவு (2016.08.11) காட்டுயானை தாக்கியதால் அல்ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவா (யூசுப் வட்டானை) அவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக பாலமுனை பிரதேச நெற்காணிகளை காட்டுயானைகள் அதிகம் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாலமுனை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments