புத்தர் சிலை அமைப்பதற்கு எதிராக வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கிளிநொச்சி, இரணைமடு கனகாம்பிகை ஆலய எல்லையில் பாதுகாப்பு தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பௌத்த நிலையத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments