ஏறாவூரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்து சிக்கியவர்கள் பெயர் விபரம் பொலிசாரால் வேளியிடபட்டது.
ஏறாவூர் பிரதேசத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த 18 பேர் வாழைச்சேனை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை, கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டு இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் ஏறாவூர் பிரதேசத்தைச்சேர்ந்த 14 முஸ்லிம்களும் 4 தமிழ் பயணிகளும் படகில் பயணித்தவேளை திருகோணமலை கடற்படையினர் மேற்படி 18 பேரையும் வாழைச்சேனைக் கடற்பரப்பில் வைத்து 15 ஆம் திகதி காலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
பயணம் செய்ய இருந்த அனைவரும் ஆண்கள் எனவும் படகில் பயணித்த நூர் முஹம்மது நஜுமுடீன், நூர் முஹம்மட் முர்சுதீன், இலவத் தம்பி முஹம்மட் அனஸ், ஆதம்பாபா, சைட் செய்யது ரவீப், தாவூத் முஹம்மது கஜீன், முஹம்மது சுபைர் சபார், முஹம்மது ஹனிபா, முஹம்மது ரசூல் ஹான், அஹமட் லெப்பை, முஹம்மது உஸைன், அர்சுதீன், ரிபாஸ், உஷைன் இஸடீன், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
இதற்கிடையில் ஏலவே இப்பிரதேசங்களிலிருந்து நீர்கொழும்பினூடாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 25 பேர் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினால் கைது செய்யப்பட்டு கடந்த 27 நாட்களுக்கு பின் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Comments
Post a Comment