தோப்பூர் செல்வநகர் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கவனம்செலுத்துவேன் – றவூப் ஹக்கீம்
எப்.முபாரக், தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி
தோப்பூர் செல்வநகர் பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமானதென அறிவிக்கப்பட்டிருக்கின்ற இச் சூழ் நிலையில் இக் காணி விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்கள அதிகாரியோடு நான் அண்மையில் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கு தொல் பொருள் எதுவும் இல்லையென தெரிவித்தார்.
எனவே இது சம்மந்தமாக உரிய அதிகாரிகளோடு பேசி அரச வர்த்தமாணி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்வேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று (01) இரவு தோப்பூர் செல்வநகர் பகுதிக்கு குடிநீர் இணைப்பிணை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்வாறு இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் இறுதி கட்ட யுத்ததின் போது 2006,2007 ஆண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்ட தோப்பூர் 10 வீட்டுத்திட்டம் இன்னும் இரானுவ முகாமாகவே இருப்பதாகவும் தாம் தொடர்ந்தும் உறவினர்களினது வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வருவதாக அக் காணிச் சொந்தக்காரர்கள் என்னிடம் தெரிவித்தனர்.இன்று யுத்த முடிவடைந்திருக்கின்ற படியினால் அவ்விடத்தில் இரானுவ முகாமொன்று தேவையற்றதொன்றாக காணப்பட்டு கொண்டிருக்கின்றது.
சம்பூரிலும், வலி வடக்கு பகுதியிலும் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கரிசணை செலுத்தி வருகின்ற இச் சூழ் நிலையில் இவ் 10 வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜமால்தீன் நஜாத் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment