கையிழந்தவர்களும் இனி கணினி இயக்கலாம்: அம்பாறை தமிழ் இளைஞனின் அபார கண்டுபிடிப்பு!
கை ஊனமுற்றேர் கால்களால் கணினி இயக்கும் முறையை பாண்டிருப்பைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் தெய்வநாயகம் மதிவதன் கண்டுபிடித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாண்டிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் மதிவதன் இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதியாண்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்.
கை ஊனமுற்றோர் கால்களால் கணனி இயக்கும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.
பாதணி(செருப்பு) ஒன்றில் கணனியை இயக்கக்கூடிய சகல ஆளி (சுவிச்)களையும் பொருத்தி கால்களால் கணனியை இயக்கக் கூடியவகையில் இதனை வடிவமைத்துள்ளார். இது கைகளை இழந்து தவிக்கும் பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மாணவனின் ஏனைய கண்டுபிடிப்புக்கள்
ஒளியூட்டப்பட்ட பற்தூரிகை ஒன்றையும் இம்மாணவன் கண்டுபிடித்துள்ளார். நாம் பற்களை பற்தூரிகையினால் சுத்தம் செய்கின்ற போது பற்களிலுள்ள காவிகள், பழுதடைந்துள்ள பற்கள் என்பவற்றை அவதானித்து பற்களைத் துலக்க முடியும்.
வீட்டுப் பாதுகாப்புக்கான நாய் குரைக்கும் ஒளி எழுப்பும் கருவியை உருவாக்கியுள்ளார். இது நாய்போல் குரைக்கும். இக்கருவியை எமது வீட்டு மதில்களிலோ முற்றத்திலோ பொருத்துவதன் மூலம் யாராவது வீட்டுக்கு வந்தால் நாய் குரைப்பது போன்று சத்தம் எழுப்பும்.
இதே போல கணனி சூடாவதைத் தடுக்கும், மெத்தையை குளிராக்கும் கருவி போன்றவற்றையும் கண்டு பிடித்துள்ளார்.
தண்டனை சட்டக் கோவையை வாசிக்கும் ரோபோ இயந்திரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Comments
Post a Comment