பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட சோகம்!

மகரகம – நிலம்மஹர பகுதியில் பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட கலவரத்தால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோதலில் காயத்துக்கு உள்ளான மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments