சேருநுவரவில் இரண்டு மாடுகளை திருடியவர் கைது
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இரண்டு மாடுகளை திருடிய நபர் ஒருவரை திங்கட்கிழமை (1) மாலையில் கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்லாறு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் சேருநுவர பகுதியில் மாடுகளை திருடி வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும், மாடுகள் காணமல் போயுள்ளதாக பண்ணையாளர்களினால் செய்த முறைப்பாட்டுக்கு அமையவும் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று செவ்வாய்கிழமை (2)மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment