கூட்டுப் பயிற்சியை ஆய்வு செய்த அமெரிக்க கடற்படைச் செயலர்!

அமெரிக்காவின் கடற்படைச் செயலர் ரே மபுஸ், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, திருகோணமலை கடற்படைத் தளத்தில் நடக்கும், கூட்டுப் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்துக்கு நேற்றுமுன்தினம் சென்ற அமெரிக்க கடற்படைச் செயலர் ரே மபுசை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன வரவேற்றார்.

இதன் பின்னர்  கடற்படை இல்லத்தில், அமெரிக்க கடற்படைச் செயலருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதன் போது, தற்போது முன்னெடுக்கப்படும் இருதரப்பு பயிற்சிகள், குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த பேச்சுக்களில் இலங்கை கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் இடம்பெற்று வரும், அமெரிக்க – இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகளை மேற்பார்வை செய்வதற்கே அமெரிக்க கடற்படைச்செயலர் இலங்கை வந்திருந்தார்.

Comments