திருகோணமலை குச்சவெளியில் கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ஐந்து கட்டு கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.

திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (17) கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபரை இன்று (18) பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்

Comments