"முகம் மூடிய மாணவிகளால் எனக்கு கிடைத்த அனுபவம்". ஒரு பெரும்பான்மை இனத்தவரின் ஆதங்கம் இது.

முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை எழுதும் ஒரு பாடசாலைக்கு மேற்பார்வையாளராக செல்லும் ஒருவரை நான் நேற்று சந்தித்தேன்.

அவர் என்னிடம் சொன்னதாவது.
நான் மேற்பார்வையாளராக சென்ற மண்டபத்தில் நடக்கும் செயல்கள் மிகவும் புதுமையானவை.

ஒரு பெண் உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்க விடை வாசிக்கிறாள்.

யார் அப்படி சத்தமிட்டு விடை வாசிக்கிறார் என்று கண்டுபிடிக்க கடினமாக இருந்தது.

அவர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள். முகம் உட்பட அனைத்தையும்

சத்தம் வரும் இடம் என சந்தேகிக்கும் இடத்துக்கு சென்றால் சத்தம் நின்றுவிடுகிறது .

ஆனால் இன்னொரு இடத்தில் விடை சொல்லும் சத்தம் ஆரம்பிக்கிறது.

இந்த முகம்  மூடிய  உடை சவுதியில் புழுதிப்புயல் , அதிகப்படியான தூசியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டுக்கு இது எதுக்குன்னு கேட்டால்  இனவாதத்தை இழுப்பதாக கூறுவார்கள்.

இறுதியில் இவர்கள் மக்கள் பணத்தில் மகபோல எடுத்து பல்கலைக்கழகம் போவாங்க. நம்ம சிங்கள மாணவர்கள் நோலிமிட்டில் உடை விற்க செல்வார்கள்.

இது நிட்டம்புவ பகுதி பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவிகள் நடந்து கொண்டவிதம்.

- ජයන්ත සුබසිංහ - தமிழில் ஏ.ஆர்.எம். இனாஸ் 

( குறிப்பிட்ட இந்த ஆதங்க பதிவு சிங்கள பக்கங்களில் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. .)

Comments