மருமகனுக்கு ஆபாசப் படம் காட்டிய மாமா கைது: கம்பளை மக்களால் சுற்றி வளைப்பு
பாடசாலை மாணவனுக்கு அலைபேசியில் ஆபாசப் படங்கள் காண்பித்த 35 வயதுடைய நபரொருவரை, கம்பளைப் பொலிஸார் வியாழக்கிழமை (04) மாலை 4.30க்கு கைதுசெய்துள்ளனர்.
கம்பளை பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வியாபார நிலையமொன்றின் மேல் மாடியில் வைத்து குறித்த சந்தேகநபர், 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்குத் தனது அலைபேசியில் ஆபாசப் படங்களை காண்பித்துள்ளார்.
இதனை அவதானித்த சிலர், பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அலைபேசியைக் கைப்பற்றியதுடன், குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் பாடசாலை மாணவன், சந்தேகநபருக்கு மருமகன் முறையெனத் தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரை, கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (TM) (fILE IMAGE)

Comments
Post a Comment