தகாத உறவு குற்றச்சாட்டில் சவூதியில் கல்லெறி மரணதண்டனை விதிக்கபட்டிருந்த இலங்கை பெண் வந்து சேர்ந்தார்.

சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.

அவருக்கான மூன்று வருட சிறைத்தண்டனை முடிவடைந்த நிலையிலேயே நாடு திரும்பியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் இலங்கையின் இளைஞர் ஒருவருக்கு 100 கசையடி தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments