யாழ். மாவட்டத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பொலிஸார் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் பேசும் பொலிஸார் அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments