தனது மனைவியை வேறு ஒருவரைக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவன் – இலங்கையில் சோகம்..!
மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி திருப்தி அடைந்த நபருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேறு ஒர் நபர் ஆயுதம் ஒன்றை காண்பித்து அச்சுறுத்தி மனைவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாவதனை குறித்த கணவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணவர் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் ஆகியோருக்கு நீதிமன்றம் 22 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும் தலா இருபதாயிரம் ரூபா அபராதமும், குற்றவாளிகள் தலா 150,000 ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேகாலை உயர் நீதிமன்ற நீதவான் தம்மிக்க கனேபொல இந்த தண்டனையை அண்மையில் விதித்துள்ளார்.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை பல்லேகனுகல அமிதிரிகல என்னம் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Comments
Post a Comment